தீபாவளி அன்று உங்கள் காரை எப்படி பாதுகாப்பது

தீபாவளிக்கு நம்மில் பலர் புத்தாடை உடுத்தி, பலகாரங்கள் உண்டு, வெடிவெடித்து உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கம் நேரம். அதேநேரத்தில் நமது கார்கள் பாதுகாப்பற்று தெரு ஓரங்களில் நிற்பதை கவனத்தில் கொள்ள தவறிவிடுவோம். விரும்பதகாத காரியம் நமது காருக்கு வெடிவெடிப்பவர்களால் நடந்துவிட்டால் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட நேரிடும். தீபாவளிக்கு உங்கள் காரை பாதுகாக்க சில டிப்ஸ்கள்

கார்செட்

சொந்தமாக கார்செட் இல்லாதவர்கள் இந்த தீபாவளிக்கு தனியார் வாகன காப்பகத்திலோ அல்லது வாகன செட் அமைத்து நிறுத்துவது ராக்கெட்வெடிகள், பட்டாசுகளின் தீப்பொறிகள் உங்கள் வாகனத்தை சேதப்படுத்தாமல் பாதுகாக்கலாம்.

கார் கவர் வேண்டாம் (தீபாவளிக்கு மட்டும்)

உங்கள் வாகனத்தை திறந்தவெளியில் நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பார்க்கிங் கவர்கள் போடவேண்டாம். தற்போது பெரும்பாலன பார்க்கிங் கவர் எளிதில் தீப்பற்ற கூடியதாக இருப்பதால் தீப்பொறிக்கு ஆளாகி மோசமான விளைவுகளை விளைவிக்கும்

எச்சரிக்கையா வாகனம் ஓட்டுங்கள்

சாலையில் வாகனம் ஓட்டும்போது உங்கள் காரின் அருகே பட்டாசு வெடித்தால் உங்கள் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கநேரிடும் மேலும் வாகனத்தின் எரிபொருள் டேங் அருகில் வெடிவெடிப்பதை நீங்கள் விரும்பமாட்டிர்கள்

ஜன்னல்களை மூடி வைக்கவும்

வாகனத்தை ஓட்டும்போதும், நிறுத்தும்போது ஜன்னல்கள் மூடி உள்ளதா என உறுதிசெய்துகொள்ளுங்கள், பட்டாசு பொறிகளோ, புகையோ காரின் உள்ளே சென்று தீப்பற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

தீ அணைப்பான்

பண்டிகை காலத்தில் மட்டும் அல்ல அணைத்து நேரத்தில் வாகன ஓட்டிகள் தீ அணைக்கும் கருவியை எப்போதும் காரில் எடுத்து செல்வது நல்லது.வாகனம் ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் தீயை கட்டுப்படுத்துவது எளிதாகிறது.

பொறுப்பற்ற குடிமகன்களால்  நம் வாகனத்திற்கு எந்த தீங்கும் வராமல் வெடிவெடிப்பதை அறிவுறுத்துவோம்.

அனைவருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Scroll to Top